Header Ads

பதிவின் சாராம்சத்தை மட்டும் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

ஆண்ட்ராய்ட் பற்றி படிக்க



சமீக காலமாக ஆண்ட்ராய்ட் இயங்குதளம்தான் ஸ்மார்ட் போன் உலகை ஆண்டுகொண்டிருகிறது. 

கூகிள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை வாங்கியபிறகு, அதனுடைய வளர்ச்சி அதீதமானதாக மாறியது. 

எந்த ஒரு நல்ல படைப்பாக இருந்தாலும் கூகுளில் உடனே தன் கொடையின் கீழ் கொண்டுவந்துவிடும். 

ஆம் நண்பர்களே.. பிரபலமான யூடியூப் தளத்திற்கு எதிராக கூகிள் வீடியோ என்ற தளத்தை ஆரம்பித்தது.. ஆனால் யூடியூப் தளத்திற்கு இணையாக வளர முடியவில்லை.. உடனே யூடியூப் தளத்தையும் தன் வசமாக்கிவிட்டது. 

google-android-kit-kat-4.4-new-os-for-smartphones

இதுதால் கூகிள் ஸ்பெஷாலிட்டி.. வெற்றி ரகசியம்.. எதிரியையும் நண்பனாக்கி, அந்த நண்பனையும் நல்லவானக மாற்றி, தான் நினைத்ததை உச்சக்கட்ட வெற்றியாக மாற்றி அமைப்பது.  அந்த வகையில் இப்பொழுது யூடியூப் தளம் மேம்பாடு அடைந்துள்ளது.

 தற்போது யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றுவதோடு, அந்த வீடியோக்களை நாமே எடிட் செய்யும் வசதியையும் கொடுத்துள்ளது. இதுபோல எந்த ஒரு புதிய வசதியானாலும்,  புதிய பயன்பாடானாலும் அதை மேம்படுத்திக் கொடுப்பதில் கூகிளே வல்லவன்.. 

யூடியூப் தளத்திற்குப் பயன்படுத்திய அதே வழிமுறைகளைத்தான் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கும் பயன்படுத்தி இப்போது ஸ்மார்ட்போன் உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கிறது கூகிள்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளமும் கூகிளும்:

ஆண்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட் போன்களை இயக்க கூடிய இயங்குதளம் என்பது நமக்கு தெரியும். 

கணினியை இயக்க எப்படி ஒரு இயங்குதளம் தேவையோ.. அதைப்போல புதிய ஸ்மார்ட் போன் என்று சொல்லப்படும் மொபைல்களை இயக்கவும் ஒரு புதிய இயங்குதளம் தேவைப்பட்டது. ஆண்ட்ராய்ட் நிறுவனம் தயாரித்த ஆண்ட்ராய்ட் OS மிக பிரபலமானது..

ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்.ன் எதிர்கால வளர்ச்சியை உணர்ந்து அதை வாங்கிக்கொண்டது கூகிள்.. எதிர்காலத்தில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நினைத்ததால் உடனே தன் நிறுவனத்தின் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிட்டது. 

கூகிள் அத்தோடு நிற்பதில்லை.. அதிலுள்ள வசதிகளை மேலும் மேம்படுத்தி பதிய படைப்பாக வெளியிடும். வெளியிட்ட புதிய படைப்பில் உள்ள  குறைநிறைகளை வாடிக்கையாளர்களின் அனுபவம் மூலம் அறிந்து அதை சரி செய்து மேலும் புதிய படைப்பாக - பதிப்பாக வெளியிடும். 

கூகிள் நிறுவனத்தில் வெற்றிக்கான தாரக மந்திரமே அதுதான். அந்த வகையில் இன்று மிகப் பிரபலமான ஒரு மொபைல் ஓ.எஸ் என்றால் அது சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் (Android OS 4.3) தான். மேற்குறிப்பிட்டவாறு மேம்படுத்தி.. மேம்படுத்தி... நல்லதொரு பயன்மிக்க ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் ஆக மாறியிருப்பதுதான் Android JellyBean 4.3. 

ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் வெற்றிக் களிப்பு முடியும் முன்னரே.. அடுத்த பதிப்பின் பெயரை வெளியிட்டு வாடிக்கையாளர்களை மேலும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது கூகிள்.  

புதிய ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் சின் பெயர் கிட்-காட்.  பிரபல சாக்லெட் நிறுவனமான நெஸ்லேவின் பாப்புலரான தயாரிப்பு இது. 

google-android-kit-kat-4.4-new-os-for-smartphones

இதற்கு முன்பு வெளிவந்துள்ள ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்.ன் பெயர்களையும் தெரிந்துகொள்வோம். இனிப்பு பெயர்களே தன்னுடைய ஓ.எஸ் களுக்கு வரிசையாக வைத்துள்ளது. 1. cupcake 2. Donut 3. Froyo, 4. Gingerbread, 5. HOneycomb, 6. Ice Cream Sandwich, 7. Jelly Bean பெயரை வாசித்தாலே அந்த இனிப்புச் சுவை நாவில் ஊறும். 

கிட்-காட் பெயர் ரகசியம்: 


கூகிள் தனது புதிய பதிப்பு ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்க்கு திடீரென இந்த பெயரை வைத்ததற்கான காரணம், கிட்-காட் சாக்லெட் அனைவருக்கும் பிடிக்கும் என்பதுதான். 

ஆனால் அது மட்டுமல்ல காரணம்.. "கிட்-காட்" பெயர் ஓசை நயத்திலும் ஓங்கி உயர்ந்துள்ளதுதான் காரணம் என பெரும்பாலானவர்களுக்கு தெரியாத விஷயம்.. ஆம். "கிட்-காட்" என நீங்கள் ஓங்கி சப்தமாக சொல்லிப் பாருங்கள்...

அந்த வார்த்தையின் மகிமை உங்களுக்கேப் புரியும். தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல.. உணர்வுப் பூர்வமாகவும் தன்னுடைய வாடிக்கையாளர்களை கவர்வதில் கூகிளுக்கு கூகிள் மட்டுமே...

இப்பதிய ஆண்ட்ராய்ட் பதிப்பு எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளிவரும் என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் இந்த தகவல் காணப்படுகிறது. 

புதிய ஆண்ட்ராய்ட் "கிட்-காட்" 4.4 பதிப்பு கூகிள் நிறுவனத்தின் அடுத்த நெக்சஸ் போன்களில் இணைந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, கூகிளின் புதிய நெக்சஸ் போன்களில் இனி கிட்-காட் 4.4 ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். தான் ராஜ்ஜியம் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.. 

பொறுத்திருந்து பார்ப்போம்.. கூகிள் ஆண்ட்ராய்ட் கிட்-காட் 4.4 சாக்லெட்டின் (O.S.) சுவை எப்படி உள்ளது என்று..

google  android kit-kat 4.4 new os for smartphones, kit-kat new android os 4.4, Android 4.4 smartphone operating system, android 4.4 kitkat release, Nestle kitkat as google smartphone OS new version 4.4, 


No comments

Powered by Blogger.